Loading . . .




திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைக்கிறார்

The Forecast 2 years ago திருப்பூர்

திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் "விபத்து வழக்கு கூடுதல் நீதிமன்றத்தை" துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் காங்கேயம் சட்டமன்ற தொகுதி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள படியூர், சிவன்மலை, கணபதிபாளையம், தம்மரெட்டிபாளையம் மற்றும் பாலசமுத்திரம்புதூர் ஊராட்சிகளில் நடைபெற்ற "கலைஞர் மக்கள் சேவை முகாமில்" பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அரசு அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஸ்ரீவள்ளியம்மா திருமண மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் மாலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பங்கேற்கும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிற்கான " உரிமைகளை மீட்க ஸ்டாலின்குரல்" என்ற தலைப்பிலான கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டம் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஜயமங்கலத்தில் நடைபெறவுள்ளது.

1 Comments

அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Post your comment here

திருப்பூர் Relateted News