தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூரில் பல பகுதிகளில் அரசு கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்
The Forecast 2 years ago திருப்பூர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று திருப்பூரில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முருங்கத்தொழுவு ஊராட்சியில் ரூ.28.60 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பசுவபட்டி ஊராட்சியில் ரூ.28.60 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் , வெப்பிலி ஊராட்சியில் ரூ.12.15 லட்சத்தில் நியாய விலை கடை, ஒட்டன்குட்டை ஊராட்சியில் ரூ.10.19 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், பிடாரியூரில் ரூ.11.97 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குமாரபுரியில் ரூ.11.97 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குமரவேல் நகரில் ரூ.15.60 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து காங்கேயம் சட்டமன்ற தொகுதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எக்கட்டாம்பாளையம், பசுவப்பட்டி மற்றும் குப்புச்சிபாளையம் ஊராட்சிகளில் முன்னதாக நடைபெற்ற "கலைஞர் மக்கள் சேவை முகாமில்" பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் அரசு அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி கணுவாய் , பசுவபட்டி பிரிவு அருகில் உள்ள அம்மன் காட்டேஜில் நடைபெறவுள்ளது.
அதன் பிறகு மாலை சிவன்மலை, காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அருள்மிகு பால்வெண்ணை பட்டாளீஸ்வரர் திருக்கோயில் திருப்பணியை துவக்கி வைக்கிறார்.
Congrats
Karthi keyan
2 years ago