Loading . . .




சேலம் மாவட்டத்தில் "நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்" என்ற தலைப்பிலான விழா மலரினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்

The Forecast 2 years ago சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, "நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்" என்ற தலைப்பிலான விழா மலரினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

இவ்விழா பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. உடன் பொதுப் பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு.பி.சந்தரமோகன், இ.ஆ.ப, மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம் சிகாமணி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News