Loading . . .




போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்

The Forecast 2 years ago சேலம்

சேலம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் நேற்று சேலம், குமாரசாமிப்பட்டி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார்கள். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என சுமார் 9,500 நபர்கள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி,இ.ஆ.ப., தெரிவித்தார்.  

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மணி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர்கள் மரு.சவுண்டம்மாள், மரு.யோகானந்த், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News