"மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப.,
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் மேம்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் "மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று தொடங்கி வைத்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான "வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது" ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் இத்திட்டமானது ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சங்ககிரி, மற்றும் ஆத்தூர் ஆகிய 7 வட்டாரங்களில் 154 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மதி சிறகுகள் என்ற தொழிற்களுக்கான சேவை மையம் மாவட்ட ஆட்சியரக வளாகம் மற்றும் வீரபாண்டி ஒன்றிய பொது சேவை கட்டிடத்திலும் இயங்கி வருகிறது. இம்மையத்தின் மூலம் மகளிர், இளைஞர்கள், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடர்பாடுகள், தடைகள் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், ஊரகப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சிக்குத் தேவையான வணிக மேம்பாட்டு சேவைகளை வழங்கவும், வங்கி கடன், வாழ்வாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடைய அரசு துறையில் உள்ள சேவைகளை பெற்று தருவதற்கும், இத்திட்டம் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவருக்கும் சேவை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. மேற்காணும் சேவைகளை பெறுவதற்கு இம்மையத்தை அணுகி தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம்.
இன்றையதினம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் மேம்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் "மதி சிறகுகள்" தொழில் மையம் குறித்த நவீன விளம்பர பதாகை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்துசெல்லும் பொதுமக்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
முன்னதாக, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் விசைத்தறி அமைப்பதற்காக மூன்று பயனாளிகளுக்கு ரூ.12.36 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி தி.சுவாதிஸ்ரீ, இ.ஆ.ப., வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ம.ஜெய்கணேஷ், மதி சிறகுகள் தொழில் மைய பணியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Respected sir, I need mathi siragugal contact no. i am yuvarani saravanan from ammapettai. my contact no. 9442229491.
yuvarani saravanan
1 year ago