Loading . . .




தொழிற்சாலை 4.0 மற்றும் மாவட்ட திறன் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

The Forecast 2 years ago சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், தொழிற்சாலை 4.0 மற்றும் மாவட்ட திறன் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும் மார்ச் / ஏப்ரல் மாதங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தொழிற்பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் ஐ.டி.ஐ மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது தொடர்பாகவும்.

குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கு தொழிற்சாலை சார்ந்து பயிற்சி கட்டணத்துடன் கூடிய பயிற்சி வழங்கவும், இதன்மூலம் வருவாய் ஈட்டும் பொருட்டு தொழிற்சாலை நிறுவனங்கள் தொழிற்சாலை 4.0 இயந்திரம் பயன்படுத்தி உற்பத்தி செய்வது போன்ற முக்கிய விஷயங்களை குறித்து கலந்தலோசிக்கபட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நிலைய மேலாண்மைக் குழுத் தலைவர் வெங்கடாஜலபதி, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் எம்.ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தே.சிவகுமார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மரு.மணி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.விஜயன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

0 Comments

Post your comment here

சேலம் Relateted News