Loading . . .




தமிழ்நாடு முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளைய தினம் டிரோன்கள் பறக்க விட மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தடை விதித்துள்ளார்   

The Forecast 2 years ago சேலம்

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப.,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளைய தினம் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில்  நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவும் உள்ளார்கள்.

இதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் ( 11.03.2024, திங்கட்கிழமை )அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


0 Comments

Post your comment here

சேலம் Relateted News