Loading . . .




ஏற்காடு மலைக் கிராம மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவையினை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்

The Forecast 2 years ago சேலம்

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைக் கிராம மகளிர் பயன்பெறும் வகையில், மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவையினை நேற்று சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. இராஜேந்திரன் ஏற்காடு பேருந்து நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்றது.

மேலும், கருமந்துறை மலைப் பகுதிகளில் வாழும் சுமார் 98 கிராமங்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்து சேவையினை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி தா. பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளர்கள் சிவலிங்கம், மணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News