Loading . . .




மக்களவை தேர்தலையொட்டி, சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., வாகன  சோதனைப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 2 years ago சேலம்

மக்களவை தேர்தலையொட்டி, சேலம், மரவனேரி பகுதியில் நேற்று வாகன சோதனைப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பின்னர் இதுகுறித்து தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, மக்களவைத் தேர்தல் 2024-க்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, அதனைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1 வீடியோ பார்வை குழு, 1 வீடியோ கண்காணிப்பு குழு, 1 கணக்கு சரிபார்ப்பு குழு என 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 11 வீடியோ பார்வை குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 11 கணக்கு சரிபார்ப்பு குழுக்கள் மற்றும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு ஒரு தினசரி அறிக்கை சமர்ப்பிக்கும் குழு ஆகிய 7 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்களவை பொதுத் தேர்தல்  நடத்தை விதிமுறைகள் நேற்றைய தினம் முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் அனைத்து குழுக்களின் செயல்பாடுகளும் உடனடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று சேலம் மரவனேரி பகுதியில் பறக்கும் படை கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆய்வு செய்யப்பட்டது என  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்க்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News