Loading . . .




வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 2 years ago சேலம்

மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி நடைபெறும் மையங்களில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

சேலம் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி 3,260 வாக்குச்சாவடி மையங்கள் அமையப்பெறவுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 13,410 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக மாற்று அலுவலர்கள் 2,682 பேர் என மொத்தம் 16,092 அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சியானது சேலம் மாவட்டத்தில் கடந்த 24.03.2024 அன்றும், இரண்டாம் கட்ட பயிற்சியானது 07.04.2024 அன்றும் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட 11 இடங்களில் அமையப்பெற்றுள்ள பயிற்சி மையங்களில் நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட மறுபயிற்சி நேற்றய தினம் நடைபெற்றது. மறுபயிற்சி நடைபெறும் மையங்களில் ஒன்றான சோனா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் சிக்கனம்பட்டி, ஏ.வி.எஸ் கல்லூரியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இரண்டாம் கட்ட மறுபயிற்சியில் கலந்து கொண்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறும் மையங்களிலேயே தபால் வாக்குகள் பதிவு செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தங்களது தபால் வாக்கினை செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்ட பயிற்சியானது வரும் 18.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அ.மயில், லட்சுமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News