Loading . . .




வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர் கல்வி உதவித்தொககைக்கு விண்ணப்பிக்கலாம் : டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தகவல்

The Forecast 2 years ago சேலம்

வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர் கல்வி உதவித்தொககைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான  பி.எச்.டி (Ph.D) முனைவர்  பட்டம்  மற்றும் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கருக்கு  கல்வி உதவித்தொகையானது பழங்குடியின நல அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.  ஆர்வமுள்ள பழங்குடியின மாணாக்கர் https://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம். மேற்படி விண்ணப்பங்களை   சமர்பிக்க   கடைசி   நாள்.  31.05.2024 எனவும், மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in/ அமைச்சகத்தின் இணையதளத்தை பார்வையிடுமாறும் தெரிவிக்கப்படுகிறது எனவும் கூறினார். 

இது தொடர்பாக கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் அனைத்து பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறும், மேலும் வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர் கல்வி உதவித்தொகை பெற மேற்கண்டுள்ளவாறு விண்ணப்பித்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News