வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் ஆய்வு கொண்டார்கள்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல், இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு கொண்டார்கள்.
சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று( 04.06.2024 ) செவ்வாய்க்கிழமை கருப்பூர், அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். மேலும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கென 6 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 18 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 25 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. குறிப்பாக, வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து இடங்களிலும் 314 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 1,500 காவல் துறையினர் மற்றும் 1,500 அரசு அலுவலர்கள் என மொத்தம் 3,000 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் பி.விஜயகுமாரி, இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பிருந்தா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ஏ.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments