Loading . . .




40 தொகுதிகளையும் வென்று வரலாற்று சாதனையை படைத்ததை தொடர்ந்து, திருப்பூரில் அமைச்சர் மு.பெ. சாமிநாதனை கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்

The Forecast 1 year ago திருப்பூர்

கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தி.மு.க. கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் மற்ற கட்சிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வது இதுவே முதல்முறை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் திமுக கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதனை கொண்டாடும் விதமாக  காங்கயம் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி, பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். 

இதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை காங்கயம் நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.கே.கார்த்திகேயன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து அமைச்சரிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டனர்.

0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News