Loading . . .




ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம்

The Forecast 2 years ago சேலம்

2022 – 2023 ஆண்டிற்குறிய ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்கான சான்றிதழினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். 

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் 385 ஊராட்சிகளுக்குட்பட்ட 5109 குக்கிராமங்களுக்கும் ஊரக குடிநீர் இயக்க திட்டம் (JJM 2020-21 மற்றும் New SVS திட்டத்தில் 1272 பணிகள்,MVS திட்டத்தில் 1294 பணிகள்) மற்றும் ஒருங்கிணைத்த 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 6,47,476 வீடுகளில் இதுவரை 5,40,905 (83.54 சதவீதம்) வீடுகளுக்கு தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,06,571 வீடுகளுக்கும் 31.12.2024-க்குள் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் ஊரக குடிநீர் இயக்க திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த 14-வது மற்றும் 15-வது நிதிக்குழு ஆகிய  திட்டங்களின் மூலம் 01.10.2022 முதல் 30.06.2023 வரையிலான காலத்தில் மட்டும் 1,76,808 வீடுகளுக்கு தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு தற்போது உள்ள 7307 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், 4632 மினி குடிநீர் தொட்டிகள் , ஊராட்சியின் சொந்த குடிநீர் ஆதாரங்கள் மற்றும் 2566 கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாகவும், ஏற்காடு ஒன்றியத்தில் உள்ள 103 ஊராட்சிகளில் சொந்த குடிநீர் ஆதாரங்கள்,SVS திட்டம் மூலமாகவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்களால் குடிநீர் கள பரிசோதனை (Field Test Kit) செய்யப்பட்டு தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் குடிநீர் (55 LPCD) என்ற அளவில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கூடுதலாக தேவைப்படும் ஊரக பகுதிகளில்  2022-23 ம் ஆண்டு மற்றும் 2023- 24 ம் ஆண்டு ஊரக குடிநீர் இயக்க திட்டத்தில் 260 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்குழு (14th, 15th CFC) திட்டத்தில் 36 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டுவதற்கான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 72 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டும் பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மீதமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணியும் விரைவு படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை தலைமை செயலகத்தில், 13.6.2024 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கான ஆய்வு கூட்டத்தில், ஊரக குடிநீர் இயக்க திட்டத்தினை 01.10.2022 முதல் 30.6.2023 வரையிலான காலகட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் 86.44 புள்ளிகள் பெற்ற சேலம் மாவட்டம் முதலாம் இடம் பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் விருது சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். 

இந்நிகழ்வில் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News