Loading . . .




திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டத்தில் வரும் 19ம் தேதி "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்" கீழ் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் இ. ஆ. ப., கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்

The Forecast 1 year ago திருப்பூர்

"உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்" தமிழக முதல்வரால் , தமிழக அரசு மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்பதன் அடிப்படையில் தொடங்கி வைக்கப் பட்டது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதம் 3-வது புதன் கிழமை, வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகத் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் இ. ஆ. ப., வருகின்ற 19 ம் தேதி காலை 9 மணி முதல் 20ஆம் தேதி காலை 9 மணி வரை அவினாசி வட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் 19 ம் தேதி காலை 9 மணிக்கு அவினாசி வட்டத்தில் கள ஆய்வு தொடங்குகிறது. காலை இ-சேவை மையங்கள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், நியாய விலை கடைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மற்றும் சத்துணவு மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், கிராம ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அளவுகளில் ஆய்வு செய்யப்பட உள்ளார். இதைத்தொடர்ந்து அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்கிறார்.

அதனை தொடர்ந்து, மதியம் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அலுவலர்களின் கள ஆய்வு கருத்துருக்கள் மீதான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மாலை அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் தொடர்பு கொண்டு குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து அரசு விடுதிகள், பூங்காக்கள், சமூக நலத்துறை, சமூக நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்கிறார். அதுமட்டுமின்றி, பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமூக கழிப்பிடங்கள், பொது போக்குவரத்து, அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து இரவு அவிநாசி வட்டத்திலேயே தங்க உள்ளார்.

இரண்டாம் நாள் காலை திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள், குடிநீர் வழங்கல், பொது போக்குவரத்து, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதரப்பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். இந்த கள ஆய்வு திட்ட முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News