Loading . . .




ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

The Forecast 1 year ago சேலம்

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் மற்றும் பேளூர் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சிகள் துறையின் கீழ் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அயோத்தியாப்பட்டிணம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள முருகன் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, பேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்புடைய அலுவலர்கள் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, பேளூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 24 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள 12வது வார்டு பாரதி நகர் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், பேளூர் ஈஸ்வரன் கோவில் அருகே ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிவறை வளாகம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும், பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.95.80 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வகம் கட்டும் பணி நடைபெற்று வருவது குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் கணேசன், கண்காணிப்பாளர் தேவராஜ், அயோத்தியாப்பட்டிணம் பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி, பேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News