வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு ஆகியவற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., ஆய்வு
The Forecast 1 year ago சேலம்
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு ஆகியவற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், முத்துநாயக்கன்பட்டியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மூலம் தாரமங்கலம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவரும் 246 நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்பட்டுவரும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் கோதுமை ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில் கொங்குப்பட்டி கிராமத்தில் நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கத்தின் சார்பில் செம்மரம் மற்றும் தேக்கு மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டுவருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டியில் ரூ.25.25 கோடி மதிப்பிட்டில் உணவு பதப்படுத்தும் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை உரிய கால அளவிற்குள் முடித்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ச.சிங்காரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ந.நீலாம்பாள், விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments