மாநிலக் கல்விக்கொள்கை குறித்து மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம்
The Forecast 3 years ago சேலம்
மாநிலக் கல்விக்கொள்கை குறித்து சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி
ஆகிய மாவட்டங்களின் மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநில
கல்விக்கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர் / புதுதில்லி உயர்நீதிமன்ற
முன்னாள் தலைமை நீதிபதி த முருகேசன் அவர்கள் தலைமையில் இன்று (28.10.2022)
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில கல்விக்கொள்கை
உயர்மட்டக் குழுத்தலைவர் / மாண்புமிகு புதுதில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை
நீதிபதி அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-22-ஆம் ஆண்டு நிதிநிலை
அறிக்கையில், “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்
குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கொள்கை ஒன்றை
வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை
உ
இந்த அரசு அமைக்கும் ' என அறிவித்திருந்தார்கள்.
அதன்படி, மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு
மண்டலங்களில் மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு
வருகிறது. இதன்தொடர்ச்சியாக, இன்றைய தினம் சேலம் மண்டலத்தில் உள்ள சேலம்,
நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான மாநிலக் கல்விக் கொள்கை
குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் சேலம் மண்டலத்தில் இடம்பெறும் கல்வியாளர்கள்,
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,
மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடையே நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், கற்றல் கற்பித்தல் மேம்பாடு, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப
பாடத்திட்டம், மாணாக்கர்களுக்கு போட்டித்தேர்வுக்கு பயிற்சியளித்தல், ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளித்தல், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பணியமைப்பு, அரசுப் பள்ளி
மாணவர்களுக்கென தனிப்பேருந்து மற்றும் குழந்தைகள் வசிப்பிடத்திற்கு
அருகாமையிலேயே அனைத்து வசதிகளும் கொண்ட அருகாமைப் பள்ளிகள் என பல்வேறு
கருத்துகளை கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பதிவு செய்தனர், இவ்வாறு மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர் / மாண்புமிகு புதுதில்லி
உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.த. முருகேசன் அவர்கள் தெரிவித்தார்கள். சவிதா இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்கம் இணை இயக்குநர் திருமதி நா.ஆனந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் முனைவர் இரா.முருகன் மற்றும் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக்குழு உறுப்பினர்களான
பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர்.எஸ்.ஜவஹர் நேசன், யூனிசெப் முன்னாள் கல்வியியல் நிபுணர் முனைவர்.அருணா ரத்னம், நாகை மாவட்டம் கிச்சன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்.பாலு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments