சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டல இயல், இசை, நாடக கலைஞர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம்
The Forecast 3 years ago சேலம்
சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டல இயல், இசை, நாடக கலைஞர்களுக்கான
கலந்தாய்வுக்கூட்டம் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர்
திரு.வாகை சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இயல், இசை, நாடக கலைஞர்கள் 50 நபர்களுக்கு ரூ.5.30 இலட்சம் மதிப்பிலான
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (03.11.2022) தமிழ்நாடு இயல்,
இசை, நாடக மன்றம் சார்பில் சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டல இயல், இசை, நாடக
கலைஞர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர் திரு.வாகை சந்திரசேகர் அவர்கள் தலைமையில்,
மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள்
நலவாரிய தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாட்டுப்புற கலைஞர்களின்
முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள
நாட்டுப்புறக் கலைஞர்களின் தேவைகளை அறியும் வகையில் மண்டல வாரியாக
ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல்,
கிருஷ்ணகிரி மற்றும் கோவை மண்டலத்துக்குட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி
மாவட்டங்களைச் சார்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இசை நாடக கலைஞர்கள், தெருக்கூத்து, தவில், பம்பை, நாதஸ்வரம்,
கரகாட்டம், மயிலாட்டம், சாக்ஸாபோன் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக்கலைஞர்கள் தங்களது
பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்கள். அதில் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள்
வழங்கிடவும், ஆடை அணிகலன்கள் வழங்கிடவும், மறைந்த கலைஞர்களுக்கான குடும்ப
பராமரிப்புக்கான ஓய்வூதியத் தொகை வழங்கிடவும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு
அரசுத்துறைகளில் துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கிடவும்,
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான கூட்ட மையம் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு
தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர்
திரு.வாகை சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை
அணிகலன்கள் வாங்குவதற்காக 48 கலைஞர்களுக்கு ரூ.10,000 வீதம் ரூ.4.80 இலட்சத்திற்கான
காசோலைகள், மறைந்த கலைஞர்களுக்கான குடும்ப பராமரிப்புத் தொகையாக 2 நபர்களுக்கு
தலா ரூ.25,000 வீதத்திற்கான காசோலைகள் என ஆக மொத்தம் 50 நபர்களுக்கு ரூ.5.30 இலட்சம்
மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு நாட்டுப்புறக்
கலைஞர்கள் நலவாரிய தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்
வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர்
திருமதி விஜயா தாயன்பன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர்(பொ) திரு.செந்தில்குமார்
உள்ளிட்ட நாட்டுப்புறக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments