Loading . . .




மக்கள் சந்திப்பு முகாமில் 332 பயனாளிகளுக்கு ரூ.36.65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்கள்

The Forecast 3 years ago சேலம்

கத்தேரி ஊராட்சியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் 332 பயனாளிகளுக்கு ரூ.36.65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இஆப,அவர்கள் வழங்கினார்கள்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி ஊராட்சியில்  (09.11.2022) நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம்,இஆ.ப, அவர்கள் பொது மக்களிடம் நேரில் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் முழுமையாக கிடைத்திடவும், மேலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு ஊராட்சியினை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் அலுவலர்கள் நேரடியாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான தீர்வுகளை வழங்கி வருகின்றோம். அதன்படி, இன்றைய தினம் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது.

கத்தேரி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்கள் சந்திப்பு முகாமில் கத்தேரி ஊராட்சிக்குட்பட்ட கத்தேரி ஆதிதிராவிடர் தெரு, நாடார் தெரு, பள்ளிக்காடு சாமியம்பாளையம் அருந்ததியர் தெரு, கத்தேரி, சமத்துவபுரம், சில்லாங்காடு, சௌதானூர், கருக்கன்காடு, வட்டமலை, சக்கரபாலிகாடு, ஆர்.ஜே.கே.நகர், கணபதிபாளையம், பாரதி நகர் உள்ளிட்ட 34 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் நேரடியாகச் சென்று, கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இன்றைய தினம் ஒரு நாள் முழுவதும் இங்கு முகாமிடுவதால் அலுவலர்களுக்கு இப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிராம மக்களுக்கு சென்று சேர்கிறதா எனவும் அறிந்துகொண்டு மேலும் முனைப்புடன் பணியாற்ற இம்முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், குடிநீர், சாலை வசதிகள், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொள்ளும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரடியாக வருகைதந்து மனுக்களாக என்னிடம் வழங்கலாம். அதேபோன்று, விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த தங்களது கோரிக்கைகளை வழங்கி தீர்வு காணலாம்.


இன்றைய தினம் கத்தேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது அதன் சாத்தியக் கூறுகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்மை

உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, இலவச சலவைப்பெட்டி, ஊட்டச்சத்துப் பெட்டகம் உள்ளிட்ட உதவிகளை 332 பயனாளிகளுக்கு ரூ.36.65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ள பயனாளிகள் இதனை தங்கள் வாழ்வின் முன்னெற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இஆ.ப., அவர்கள் தெரிவித்தார்,


இந்நிகழ்வில், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சுந்தரராஜன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மு.சௌம்யா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு. ப.இரவிக்குமார், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.தே.புருசோத்தமன், இணை இயக்குநர், வேளாண்மைத்துறை திரு.சிங்காரம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி அமயில், சங்ககிரி வட்டாட்சியர் திருமதி எஸ்.பானுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் சங்ககிரி ஒன்றியக்குழு துணைத் தலைவர் திரு, அபா, சிவக்குமாரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி சாந்தாமணி ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.ப.துரைசாமி, கத்தேரி ஊராட்சி மன்றத்தலைவர் கலந்துகொண்டனர்.

.எஸ்.தமிழ்செல்வி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள்

0 Comments

Post your comment here

சேலம் Relateted News