Loading . . .




"காசி } தமிழ் சங்கமம்" நிகழ்ச்சிகோவை வழித்தடத்தில் எர்ணாகுளம் } பாட்னா சிறப்பு ரயில்

The Forecast 3 years ago கோவை

கோவை, நவ. 21: "காசி } தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர்களுக்காக, கோவை வழித்தடத்தில் எர்ணாகுளம் } பாட்னா இடையே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

"காசி } தமிழ் சங்கமம்" நிகழ்ச்சி, நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை வாரணாசியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 19இல் பிரதமர் மோடி, இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க  செல்லும் மாணவ, மாணவிகள், மக்களுக்காக கல்வி அமைச்சகம், மத்திய அரசு சார்பில் ரயில்களில் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கோவை வழித்தடத்தில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு நவம்பர் 20ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  "காசி } தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியில் கல்ந்து கொள்ள எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்( எண்: 22669)  நவம்பர் 20( ஞாயிற்றுக்கிழமை) இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, காலை 4.30  மணிக்கு கோவை நிலையம் வந்தடையும். இங்கிருந்து, விழாவில் பங்கேற்போரை ஏற்றிக்கொண்டு பாட்னாவுக்கு புறப்பட்டுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் வழியனுப்பும் விழா: கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை "காசி } தமிழ் சங்கமம்" நிகழ்ச்சிக்கு செல்வோரை வழியனுப்பும் விழா, கோவை ரயில் நிலையத்தில் 5ஆவது நடைமேடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மக்களவை முன்னாள் உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், விவசாய அணியின் மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ், பஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக பாஜகவின் ஊடகப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

கோவை Relateted News