Loading . . .




பெண் மேயர்களுக்கு ‘மாற்றத்தை உருவாக்குபவள்’ திறன் மேம்பாட்டு பயிரலங்கம் துவங்கம்

The Forecast 3 years ago கோவை

கோவை, நவ.24 கோவை தமிழ்நாடு ஹோட்டலில் தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் பெண் மேயர்கள், துணை மேயர்கள், நகர மன்ற தலைவர்களுக்கான ‘‘மாற்றத்தை உருவாக்குபவள்’’ என்னும் முதற்கட்ட திறன் மேம்பாட்டு மூன்று நாள் பயிலிரங்கத்தை கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் மாநில மகளிர் ஆணையத்தலைவர் குமார் துவங்கி வைத்தார்.

தேசிய மகளிர் ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பெண்கள் பாலினம் மற்றும் உள்ளூர் நிர்வாகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் - பிரச்சனைகள் மற்றும் சவால்கள், பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டங்கள், பெண்கள் மேம்பாட்டிற்கான அரசின் சமூக நலத்திட்டங்கள், நகர்புற மேம்பாட்டுத் திட்டங்கள், நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள், பாலின வரவு-செலவு மற்றும் தணிக்கை, வாழ்க்கை திறன், வேலை வாழ்வு சமன்பாடு, தலைமைப்பண்பு உள்ளிட்ட தலைப்புகளின் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் தங்களுடைய தலைமைத்துவ பண்புகள் மற்றும் திறன்களை வளர்த்து மக்கள் சேவையில் சிறப்புடன் பணியாற்றிட தேசிய மகளிர் ஆணையத்துடன் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் இணைந்து முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகரமைப்பு கல்வி கழக இயக்குநர் சரஸ்வதி, பேராசிரியர் தமிழ்செல்வன் மற்றும் மேயர்கள், துணைமேயர்கள், நகர மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

0 Comments

Post your comment here

கோவை Relateted News