Loading . . .




புல்லுக்காடு பகுதி அடுக்கமாட்டி குடியிருப்பு சுவர்களில் வரையப்பட்டு வந்த ஓவிய பணிகள் நிறைவு மக்கள் பயன் பாட்டிற்கு திறப்பு

The Forecast 3 years ago கோவை

கோவை,நவ.25கோவை மாநகராட்சி சார்பாக மாநகர் முழுவதும் ரூ.1500 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குளங்களை சீரமைத்தல், புனரமைத்தல், அழகு படுத்துதல், படகு சவாரி உருவாக்குதல், திருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுதல், 24 மணி நேர குடிநீர் திட்டம், சாலை வசதிகள் தெருக்களை அழகு படுத்துவது,  மிதிவண்டி பாதை உருவாக்குவது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உட்பட பல்வேறு மாநகராட்சி கட்டிடங்களில் ஓவியங்கள் வரைவது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் அமைப்புடன் இணைந்து மாநகராட்சி சார்பாக ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இந்த ஓவியங்கள் பல்வேறு காலை வணக்கங்களுடன், பல்வேறு மென்பொருள் சார்ந்த கருத்துக்களை வரைபட்டு வருகிறது. குறிப்பாக வானம் படிப்பு கல்வி போன்றவை இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்த பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புல்லுக்காடு பகுதி அடுக்கமாட்டி குடியிருப்பு சுவர்களில் வரையப்பட்டு வந்த ஓவிய பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கலெக்டர் சமீரன்,  போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி  கமிஷனர் பிரதாப், ஆகியோர் பார்வையிட்டு தொடங்கி வைத்தனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News