Loading . . .




ஆளுநர் மாளிகை நோக்கி நடக்கும் பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்பு

The Forecast 3 years ago கோவை

கோவை, நவ.26: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப் பதிவு ஆணையம் கடந்த ஆண்டு 42 ஆயிரம் தினக்கூலிகள் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கிறது. ஒரு புறம் இடுபொருட்களின் விலையேற்றம், மறுபுறம் விளைபொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமை, ஆகியவற்றால் விவசாயிகள் வேளாண் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி மின்சாரத் திருத்த சட்டம் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான போராட்டத்தில் விவசாயிகளின் பேரியக்கமான ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளது. வரும் 26ம் தேதி வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்தும், தமிழகத்தில் டெல்லியின் முகவராக செயல்பட்டு அரசியலமைப்புக்கு விரோதமாக ஈடுபட்டுவரும் ஆளுநரைக் கண்டிக்கும் வகையிலும் தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி மாபெரும் பேரணியை நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட குழு கலந்து கொள்ள உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News