Loading . . .




போக்குவரத்தை சீரமைத்த போலீசாருக்கு மாநகராட்சி கமிஷனர் பாராட்டு

The Forecast 3 years ago கோவை

கோவை, நவ.27கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் தலைமை காவலர் அல்லிதுரைக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் காவலர் அல்லிதுரைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கோவை மாநகராட்சியின் ஆய்வு பணிக்காக அவினாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது தாங்கள் மிகச்சிறப்பாக போக்குவரத்தை சீரமைத்தும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான விழுப்புணர்வு பிரசாரத்தை மிக அருமையான முறையில் செய்துகொண்டிருந்ததையும் கண்டு மகிழ்ச்சியுற்றேன். தங்களின் கடைமை உணர்வுடன் கூடிய இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள், என தெரிவித்திருந்தார்.

மேலும் காவல் அல்லிதுரையை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவருக்கு பாராட்டு சான்றிதழையும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வழங்கினார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News