Loading . . .




பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களில்ஓட்டுநர், நடத்துநர்கள் பதிவு சான்று பெறாமல் வாகனங்களை இயக்கக்கூடாதுதொழிலாளர் உதவி கமிஷனர் தகவல்

The Forecast 3 years ago கோவை

கோவை, டிச.3: கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள், லாரி சர்வீஸ், தனியார் மற்றும் அனைத்து மக்கள் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் வாகன ஓட்டுநர், நடத்துநர்கள் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் விதியின் கீழ் பதிவு செய்து பதிவு சான்றுபெற வேண்டும். மேலும் இரு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவு சான்று பெறாமல் வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு முரணாகும். எனவே. தொழிலாளர் துறையின் கீழ் உள்ள ஆய்வாளர்களால் நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்யும் போது பதிவு சான்று புதுப்பிக்காமல் வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் வழக்கு தாக்கல் செய்யப்படும். எனவே அனைத்து பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், லாரி, பஸ் சர்வீஸ் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தாமாக முன்வந்து பதிவு சான்று பெறவும், புதுப்பித்து கொள்ளவும் கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

கோவை Relateted News