ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவை, டிச.5: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் டிபி ரோடு சாலையில் உள்ள நடைபாதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்மையில் புனரமைக்கப்பட்டது. டிபி ரோடு சாலை மாதிரி சாலையாக மாற்றப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. இதனிடையே டிபி ரோடு நடைபாதையில் பழக்கடை, தள்ளுவண்டி கடைகள் இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தன.
இதனால், மக்கள் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. இதனிடையே ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து மேற்கு மண்டல அதிகாரிகள் நேற்று பழக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்றினர். மேலும் இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
0 Comments