கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவுடன் ஆதார் எண்ணை இம்மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் தொழிலாளர் உதவி கமிஷனர்
The Forecast 3 years ago கோவை
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்நல வாரிய பதிவுடன் ஆதார் எண்ணை இம்மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும்தொழிலாளர் உதவி கமிஷனர்
கோவை, டிச.23: கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, ஆதார் விவரங்கள் இல்லாததால் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, நல வாரிய அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது அவசியமாகிறது.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்த கொள்ள www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட இணையதளத்தில் ஏற்கனவே நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்த புதுப்பித்தல் இல்லாத தொழிலாளர்கள் ரீனிவல் என்ற பகுதியில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இணையதளத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தவர்களை தவிர பழைய நடைமுறையில் புதுப்பித்தல் செய்தவர்கள் அப்டேசன் என்ற பகுதியில் சென்று தங்களது ஆதார் எண், ஸ்மார்ட் கார்டு மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் எண்ணை நலவாரிய பதிவுடன் இணைப்பதால் மட்டுமே தமிழக அரசு வழங்கும் அனைத்து தொழிலாளர் நலவாரிய நலத்திட்ட உதவிகள் பெற இயலும். எனவே நலவாரிய பதிவுடன் தங்களது ஆதார் எண் இணைக்காத தொழிலாளர்கள் இம்மாத இறுதிக்குள் ஆதார் எண்ணை நலவாரிய பதிவுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
0 Comments