Loading . . .




கொரோனா தடுக்க மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

The Forecast 3 years ago கோவை

கோவை, டிச. 28: சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியை மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உச்சத்தில் இருந்தபோது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் தொடர் முயற்சி மற்றும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்தது. தற்போது மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மீண்டும் மேற்கொள்ள உள்ளனர். இப்பணிக்காக வார்டு 2 பேர் வீதம் 100 வார்டுகளுக்கு 200 பேர் இப்பணியில் விரைவில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News