Loading . . .




பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் புகார் அளிக்க எண்கள் அறிவிப்புகோவை,

The Forecast 3 years ago கோவை

கோவை,ஜன.5: கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:தமிழகத்தில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையுடன் ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் ஜனவரி 3 முதல் 8ம் தேதி வரை குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்: 0422-2300569, மாவட்ட வழங்கல் அலுவலர்: 9445000245, தனி வட்டாட்சியர் வடக்கு: 9445000246, தனி வட்டாட்சியர் மேற்கு : 9445000250, தனி வட்டாட்சியர் தெற்கு: 9445000247, தனி வட்டாட்சியர் பொள்ளாச்சி: 9445000252, தனி வட்டாட்சியர் அன்னூர்: 9445796442, வட்ட வழங்கல் அலுவலர் ஆனைமலை : 9361646312, வட்ட வழங்கல் அலுவலர் பேரூர்: 9445000249, வட்ட வழங்கல் அலுவலர் மதுக்கரை: 9445000248, வட்ட வழங்கல் அலுவலர் கிணத்துக்கடவு: 9445796443, வட்ட வழங்கல் அலுவலர் மேட்டுப்பாளையம்: 9445000251, வட்ட வழங்கல் அலுவலர் சூலூர்: 9445000406, வட்ட வழங்கல் அலுவலர் வால்பாறை: 9445000253. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News