கோவை, ஜன. 24 கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், கடைகள், கட்டிடங்கள் போன்றவைகள் அன்மை காலமாக மிகவும் தீவிரமாக அகற்றப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதியில் இருந்து மட்டும் ரூ.200 கோடி அளவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் உத்தரவின் பேரில் நகரமைப்பு அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். மேலும் அனுமதியின்றி சாலையோரங்களில் மீண்டும் கடை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments