Loading . . .




உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1 கோடி மதிப்பில் மிதக்கும் சோலார் பேனல் நிலையம் அமைக்க ஆய்வு

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப்.2: கோவை உக்கடம் பெரியகுளத்தில், சோலார் பேனல் உற்பத்தி நிலையம் அமையவுள்ள இடத்தை சுவிஸ் வளர்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் தூதர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி, உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.1 கோடி மதிப்பில் சோலார் பேனர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், சுவிஸ் வளர்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் தூதர் கிறிஸ்டியன் ப்ரூட்டிகர் மற்றும் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, துணை கமிஷனர் ஷர்மிளா, மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் முபசீரா, உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News