Loading . . .




கொடிசியாவில் பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் - 2023 கண்காட்சி மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைத்தார்

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப். 3: கோவை கொடிசியாவில் பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் - 2023 கண்காட்சி இன்று துவங்கியது. கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் துவக்கி வைத்தார்.

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று முதல் 6ம் தேதி வரை பில்ட் இன்டெக் மற்றும் வாட்டர் இன்டெக் - 2023 கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 1 லட்சம் சதுர அடியில் 290 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும். நுழைவுக்கட்டணம் 50 ரூபாய்.  இந்த கண்காட்சியில் கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில் நுட்பம், கதவுகள், ஜன்னல்கள், ரூபிங் பொருட்கள், இன்டீரியர் டிசைனர்ஸ், பயோ செப்டிங் டேங்க், ஓசோன் ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

இன்று காலை 10 மணிக்கு கண்காட்சி துவக்க விழா நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப் துவக்கி வைத்தார்.பில்ட் இன்டெக் தலைவர் சிவக்குமார், துணை தலைவர் வள்ளல், கொடிசியா செயலாளர் சசிக்குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News