Loading . . .




மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை மாநகராட்சி கமிஷனர் தகவல்

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப். 5 கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது: வள்ளலார் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் வரும் 5ம் தேதி (நாளை) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர், அறுவைமனைகள் மற்றும் துடியலூர்

மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி

அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News