Loading . . .




கோவை - சென்னை ரயில் சாமல்பட்டி நிலையத்தில் நின்று செல்லும்

The Forecast 3 years ago கோவை

 கோவை, பிப். 8: கோவை - சென்னை ரயில், சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை - சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி விரைவு ரயில்  கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்கிறது. வரும் நாள்களில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு உள்பட்ட சாமல்பட்டி நிலையத்திலும் இந்த ரயில் நின்று செல்லும். சென்னையில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 5.50 மணிக்கு சாமல்பட்டியைச் சென்றடையும். இரவு 10.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். கோவையில் காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.55 மணிக்கு சாமல்பட்டியைச் சென்றடையும். பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை  சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News