கோவை மாநகராட்சி வ.உ.சி.உயிரியல் பூங்காவில் பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் ஆய்வு
The Forecast 3 years ago கோவை
கோவை, பிப். 8: கோவை மாநகராட்சி வ.உ.சி.உயிரியல் பூங்காவில் சுகாதாரம் மற்றும் பறவைகள், விலங்குகளின் ஆரோக்கியம் பற்றியும் விலங்குகளும் வழங்கப்படும் உணவுகள் தரம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பாம்புகளுக்கு உணவாக வழங்கப்படும் கோழி குஞ்சுகள் நல்ல நிலையில் இருக்கிறதா என்றும் உணவு பொருட்கள், பழங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளதா என்று பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன்அவர்கள் ஆய்வு செய்தார்.
அப்போது கோவை மாநகராட்சி வ.உ.சி.உயிரியல் பூங்கா மருத்துவர் சரவணன் கூறுகையில் சாலையில் சுற்றி திரிந்த பறிமுதல் செய்து வைத்துள்ள கால்நடைகளை உரிமையாளர்கள் வந்து அபராதம் தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள், ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் நல்ல முறையில் பராமரிப்பு செய்து வருவதாகவும் கூறினார்.
0 Comments