Loading . . .




கோவை மாவட்டம் முழுவதும் 46 தனிப்படை குழுக்கள் மூலம் கஞ்சா வேட்டையாடிய காவல்துறையினர் 29 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப். 10 கோவை மாவட்டம் முழுவதும்  46 தனிப்படை குழுக்கள் மூலம் கஞ்சா வேட்டையாடிய  காவல்துறையினர். அதிரடியாக 29 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில்   கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உட்கோட்டம் வாரியாக  துணை கண்காணிப்பாளர்  தலைமையில், 46 தனிப்படை குழுக்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 105 நபர்கள்  கண்டறியப்பட்டு, அதில் கஞ்சாவுடன் பிடிபட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 28 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்கள் (Cool வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனையின் போது மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 4 அவுட்டுகாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.   காரமடை பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும்  அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த  நபரிடமிருந்து 600 லாட்டரி சீட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர் குற்றத்தில் ஈடுபடும் 25 நபர்கள் மீது  நன்னடத்தை  பிணை பத்திரம் பெற்று எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

கோவை மாவட்ட காவல்துறையின் இதுபோன்ற திடீர் நடவடிக்கைகள் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது  தொடர்ந்து நடைபெறும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.


0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News