Loading . . .




142 நாய், 8 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப்.10: கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் காளப்பட்டி அருகேயுள்ள வீரியம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி தலைமை வகித்து வெறிநோய் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். வெறிநோய் தடுப்பு குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் 142 நாய்களுக்கும், 8 பூனைகளுக்கும் இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

0 Comments

Post your comment here

கோவை Relateted News