2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலப் பணிகளுக்காக
The Forecast 3 years ago கோவை
கோவை, பிப். 11: பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலப் பணிகளுக்காக குழாய் இணைப்பு பணிகள் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறும் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், 4. வீரபாண்டி பேரூராட்சி, கூடலூர் நகராட்சி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் கோவை மாநகராட்சியின் துடியலூர் பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, உள்ளாட்சி நிறுவனங்களும் பொது மக்களும் தங்கள் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பில்லூர் நிர்வாகப்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments