மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரச் சிற்றுண்டி மேயர் துவக்கி வைத்தார்
The Forecast 3 years ago கோவை
கோவை, பிப். 11: கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேல்நிலைப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள தயார் செய்யும் பொருட்டு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வகுப்புகளில் பங்கேற்கும் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 5608 மாணவ, மாணவிகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம், உதவி கமிஷனர் மோகனசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments