சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது
The Forecast 3 years ago கோவை
கோவை, பிப். 11: கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம்-2, வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைத்தொட்டி வரை உள்ள குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் முத்துக்கல்லூர் என்ற இடத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணி இன்று நடைபெறுகிறது.
இதனால் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சௌரிபாளையம், கணபதி, காந்திபுரம், புலியகுளம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் சிரமத்தினை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments