கோவை,பிப்.12 கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், 24 சிறப்பு அமர்வுகள் மூலம் காசோலை வழக்குகள், வாகன விபத்து, நில ஆர்ஜித வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் இன்று ஒரேநாளில் மொத்தம் 4,183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.41 கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 458 மதிப்பில் சமரச தீர்வு வழங்கப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் இழப்பீடு தொகையை காசோலையாக பயனாளிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் உடன் இருந்தார்.
0 Comments