கோவை, பிப். 14: கோவை உக்கடம் பகுதியில் டி.கே. மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளைகிழக்கு போன்றவைகள் வரத்து இருக்கும். இங்கு வரும் காய்கறிகளை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து வியாபாரிகள் வருவார்கள். அதே போல் கோவை மாநகர சுற்றுவட்டார மக்களும் காய்கறிகள் விலை கடைகளை காட்டிலும் குறைவாக உள்ளதால் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.
இதனிடையே இன்று விற்பனைக்கு வந்த காய்கறிகளில் முருங்கைக்காய் அதிக விலையில் காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை. மக்களும் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.
இதுகுறித்து இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:
டி.கே. மார்க்கெட் மற்றும் கோவையின் இதர மார்க்கெட்டுகளிலும் முருங்கைக்காய் விலை அதிகரித்து காணப்பட்டது. மொத்த விற்பனை விலையில் கிலோ ஒன்றுக்கு முருங்கையின் விலை ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கைக்காயை வாங்க வந்த முருங்கை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். முருங்கைக்கு அடுத்து வெண்டைக்காய் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments