Loading . . .




விசாரணை கைதியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல்

The Forecast 3 years ago கோவை

திருப்பூர்,பிப்.14: திருப்பூரிலிருந்து கோவை சிறைக்கு அழைத்து சென்ற குற்றவாளி தப்பியோடிய விவகாரத்தில் அவரை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவை சேர்ந்தவர் தாலிப் ராஜா (30). திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய எல்லையில் திருட்டு வழக்கில் தொடர்பு இருந்ததால் போலீசார் தாலிப் ராஜாவை கைது செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர். மேலும், திருப்பூர் வடக்கு, தெற்கு போலீஸ் நிலையம், மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் தாலிப் ராஜா மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசார் 5 பேர் கோவை சிறையிலிருந்து தாலிப் ராஜாவை அழைத்து வந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் சிறையில் அடைப்பதற்காக அரசு பஸ்சில் அழைத்து சென்றனர். அப்போது பஸ் ஒண்டிப்புதூரில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தாலிப்ராஜா பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், தப்பி சென்ற தாலிப்ராஜாவை பிடிக்க திருப்பூர் மாநகர போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


0 Comments

Post your comment here

கோவை Relateted News