Loading . . .




இலவச சுயதொழில், வேவைவாய்ப்பு திறன் பயிற்சி

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப். 18 கோவை கோ இண்டியா அசோசியேஷன் தலைவர் கார்த்திக் கூறியிருப்பதாவது:

கோவையில் உள்ள கோ இண்டியா அசோசியஷன் பயிற்சி மையத்தால் மதுக்கரை வட்டத்தில் உள்ள படித்த 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்ற இலவச திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், டெய்லரிங் மற்றும் கேட்டரிங் பயிற்சி வழங்கப்படும் இப்பயிற்சி பெற விரும்புவோர் மதுக்கரை வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் கோ இண்டியா பயிற்சி நிறுவனத்தை 9597555941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


0 Comments

Post your comment here

கோவை Relateted News