Loading . . .




தேர்தல் விதிமுறை மீறல் அரசியல் கட்சியினர் 74 பேர் மீது வழக்கு

The Forecast 3 years ago கோவை

ஈரோடு, பிப். 20: ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, அரசியல் கட்சியினர் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள், கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்கள் வைத்தவர்கள், முன் அனுமதியின்றி கூட்டம் கூட்டுபவர்கள், தேர்தல் பணி மனையினை அனுமதியின்றி அமைத்த அரசியல் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜன.மாதம் 18ம் தேதி முதல் தற்போது வரை அரசியல் கட்சியினர் மீது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News