கோவை, பிப். 20: கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் தமிழக டி.ஜி.பி. திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை சரி பார்த்தார். மேலும் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் குறைகள் கேட்டறிந்தார். தொடர்ந்து போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை அவர் வழங்கினார். இந்த ஆய்வு குறித்து அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் விரைந்து சென்று டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் போலீஸ் நிலைய செயல்பாடுகள், வழக்குகள் குறித்து எடுத்து கூறினர். மேலும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுடன் அங்கிருந்த போலீசார் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
முன்னதாக பீளமேடு போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்தார்
0 Comments