கோவை மாநகராட்சி சார்பில் கோவை மாநகர் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அவ்வப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது அனுமதிற்ற கடைகள் சாலை ஓரங்களில் போடப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது இன்று சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த ஆணையாளர் உத்தரவின் பேரில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்
0 Comments