Loading . . .




கோவை சிறை கைதி சாவு

The Forecast 3 years ago கோவை

கோவை, பிப். 21-திருப்பூரை சேர்ந்தவர் சங்கர்(30). இவர், திருப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சங்கர் திடீரென சிறையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சங்கரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 Comments

Post your comment here

கோவை Relateted News