கோவை, பிப். 21: மதுரை } திருமங்கலம் இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நாகர்கோவில் } கோவை விரைவு ரயில்( எண்:22667) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கோவை } நாகர்கோவில் விரைவு ரயில்( எண்:22668) பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மதுரை } கோவை ரயில்( எண்: 16722) மார்ச் 6ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், திருநெல்வேலி } டாடர் வாராந்திர ரயில்( எண்: 22630) மார்ச் 1 ஆம் தேதி, மதுரை, கரூர், ஈரோடு,கோவை, ஷொரனூர் வழித்தடத்தில் இயங்குவதற்கு பதிலாக, அன்றைய தினம், திருவனந்தபுரம்,கொல்லம், எர்ணாகுளம்,,ஷொரனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments